Saturday 26 September 2015

ஞாயிற்றுக் கிழமை

பத்துமணி வரை படுக்கையில்
கிடக்கும் நாள்....

மூன்று வயது மகள் வந்து
முதுகில் உதைத்து எழுப்பும் நாள்

சோத்துப் பையைத் தோளில்
மாட்டாத நாள்...

கூட்டத்தில் வேர்வையை
மழையென வடிக்காத நாள்...

வேப்பங் குச்சியால்
பல் துலக்கும் நாள்...

'நேரமாச்சு' என்று வீட்டாரோடு
சண்டையில்லாத நாள்...
இந்த சண்டே தான்!

கிளம்பும் அவசரத்தில்
சட்டைப் பட்டனை மாற்றி
மாட்டாத நாள்...

மனைவி தனியாகச் சமைத்த
உணவைச் சாப்பிடும் நாள்!